சத்தீஸ்கர் கருத்தடை மரணங்கள்: குற்றத்தை மூடி மறைக்கிறது அரசு; ராகுல் காந்தி தாக்கு

சத்தீஸ்கர் கருத்தடை மரணங்கள்: குற்றத்தை மூடி மறைக்கிறது அரசு; ராகுல் காந்தி தாக்கு
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் கருத் தடை அறுவை சிகிச்சையால் 13 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் பல பெண்கள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த குற்றத்தை மூடி மறைக்க அரசு முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

“நல்ல சுகாதாரச் சேவையை வழங்குவது அரசின் கடமையாகும். அதற்கு நேர் மாறாக, கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் முறையாக ஒருங்கிணைக் கப்படவில்லை. இந்தச் சம்பவத் துக்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாக, அறுவை சிகிச்சைக்குப் பயன் படுத்தப்பட்ட மருந்துகளை அரசு எரித்துள்ளது. சாட்சியங்கள் அழிக்கப்படுகின்றன. இதன் மூலம் நடந்த குற்றத்தை மூடி மறைக்கப் பார்க்கிறது அரசு.

நான் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தேன். அவர்கள் நடந்ததைச் சொன்னார்கள். தரக் குறைவான மருந்துகளால் அந்தப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது அலட்சியம் மட்டுமல்ல. இதில் ஊழலுக்கும் பங்கிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களைக் கவனிக்காமல் விட்டது முழுக்க முழுக்க அரசின் தவறு” என்றார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அம்மாநில காங்கிரஸ் கட்சி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அமர் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள அவர், “மாநிலத்தில் என்ன நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்தச் சம்பவத்துக்கு நான் தார்மீகப் பொறுப்பு ஏற்கிறேன். இதில் ராஜினாமா என்ற கேள்விக்கு இடமில்லை. எனது கட்சிதான் எதையும் முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in