

கலைஞர் டிவிக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்த வழக்கில் சாட்சிகள் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், ஸ்வாம் டெலிகாம் நிறுவனத்துக்கு 13 சேவை வட்டங்களில், அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் அமைச்சக அதிகாரிகளின் ஆதரவோடு, சட்டவிரோதமாக தொலை தொடர்பு உரிமம் வழங்கப்பட்டது. அதற்குப் பிரதிபலனாக ஸ்வாம் டெலி காம் நிறுவனம் தன்னோடு தொடர் புடைய நிறுவனங்கள் மூலமாக திமுக எம்.பி. கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதி யின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் பங்குதாரராக உள்ள கலைஞர் டிவி நிறுவனத்துக்கு ரூ. 200 கோடி அளித்த தாக அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
இவ்வழக்கில், கனிமொழி, ஆ.ராசா, தயாளு அம்மாள், ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள் ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா, 9 நிறுவனங்கள் என மொத்தம் 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தினமும் விசாரணை
இந்த வழக்கில், டெல்லி சிறப்பு நீதி மன்றத்தில் அடுத்தகட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இதில், சாட்சிக ளிடம் விசாரணை நடந்தது. அமலாக்கப் பிரிவு இணை இயக்குநர் ஹிமான்சு குமார் லால் அரசுத் தரப்பு சாட்சியாக தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார்.
அவர் நீதிபதி ஓ.பி. சைனியிடம் கூறும் போது, “2013-ம் ஆண்டில் அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங், உதவி இயக்குநர்கள் கமல் சிங், சத்யேந்தரி சிங் ஆகியோர் விசாரணை அதிகாரி களாகப் பொறுப்பேற்று விசாரித்து வந்தனர். இந்த விசாரணை எனது கண் காணிப்பின் கீழ் நடைபெற்றது” என்றார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ஹிமான்சு குமாரிடம் “உங்களின் பங்களிப்பு என்ன” எனக் கேட்டார்.
அதற்கு, ‘சட்டப்படி விசாரணை நடை பெறுகிறதா என நான் பார்த்து வந்தேன்’ என்றார். வழக்கு விசாரணை நாளை முதல் தினமும் நடைபெறும். நாளை ஹிமான்சுவிடம் விசாரணை நடக்கிறது.
இதில், அரசுத் தரப்பு சாட்சிகளாக கருணாநிதியின் மகள் எஸ். செல்வி உட்பட 30 பேரை அமலாக்கப்பிரிவு குறிப்பிட்டுள் ளது. இந்த வழக்கில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டால் அதிகபட்சமாக தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.