

பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் முரண்பட்ட கருத்துகள் வெளியானதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் நேற்று கூறியதாவது:
பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் பாதுகாப்பு அமைப்புகள் தன்னிச்சையாக செயல்படுகின்றன. இதில் எத் தனை தீவிரவாதிகள் பலியானார் கள் என்ற விவரம் உள்துறை அமைச்சருக்கே தெரியவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் முடிந்துவிட்டதா இல்லையா என்ற விவரமும் அவருக்கு தெரியவில்லை.
இரு தரப்புக்கும் இடையிலான தாக்குதல் முடிந்துவிட்டதாக உள்துறை அமைச்சர் கூறிய நிலையில், இன்னும் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாக உள்துறை செயலாளர் கூறுகிறார். இப்படி முரண்பட்ட தகவல் வெளி யாவதன் மூலம் அரசு துறை களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பது தெளிவாகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இருட்டறையில் இருக்கிறது. எதை எப்படி செய்ய வேண்டும் என்பது அரசின் பல பிரிவுகளுக்கு தெரியவில்லை.
இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் நாட்டு மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அரசு இயந்திரம் செயலற்றுவிட்டது. அனைத்து அதிகாரங்களையும் பிரதமர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பதே இந்த குளறுபடிக்கு முக்கிய காரணம்.
நாட்டுக்கு எதிராக தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில்கூட மத்திய அமைச் சரவை கூடி ஆலோசித்ததா இல்லையா எனத் தெரியவில்லை. இதன்மூலம் பிரதமர் அலுவலகமே அனைத்து அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்வது உறுதியாகிறது. சம்பந்தப்பட்ட அமைச்சரைக்கூட இதில் இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.
இந்தத் தாக்குதலில் பாகிஸ் தானுக்கு தொடர்பு இருப்பதற்கான போதுமான ஆதாரம் கிடைத் துள்ளது. குறிப்பாக, தீவிரவாதி கள் பாகிஸ்தானில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். ஆனாலும், அதுபற்றி பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகிய அனைவரும் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்ட தயங்குகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.