கேரள முதல்வர் பினராயி தலைக்கு ரூ.1 கோடி: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சர்ச்சை கருத்து

கேரள முதல்வர் பினராயி தலைக்கு ரூ.1 கோடி: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சர்ச்சை கருத்து
Updated on
1 min read

கேரள முதல்வர் தலைக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்குவேன் என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி யினருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப் பினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனில் நேற்று நடந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சந்திரவாட் பேசியதாவது:

கேரளாவில் 300 ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் கொலைக்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனே காரணம். அவரது தலையைக் கொண்டு வருபவர் களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கு வேன். எனது சொத்துகளை விற்றாவது தருவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியபோது, ஆர்எஸ்எஸ் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியபோது, ஆர்எஸ்எஸ் ஒரு தீவிரவாத அமைப்பு என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in