

அணுசக்தி எரிபொருள் முகமை (என்எஸ்ஜி) அமைப்பில் இந்தியா இணைய சீனா தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணைச் செயலாளர் நிஷா பிஸ்வால் கூறியதாவது:
என்எஸ்ஜி அமைப்பில் இணைவதற்கு இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. அந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவை ஆதரிக்கின்றன. ஆனால் சீனா தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
என்எஸ்ஜி அமைப்பில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு அளிக்கும். இந்த விவகாரம் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.