செம்மரக் கடத்தல் கும்பல் கைது

செம்மரக் கடத்தல் கும்பல் கைது

Published on

செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 14 பேரை ஆந்திரா மாநிலம் கடப்பாவில் சுற்றிவளைத்து போலீஸார் கைது செய்தனர்.

கடப்பாவில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான செம்மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி ஏசுபாபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோடூரு, ராஜம்பேட்டை உள்ளிட்ட வனப் பகுதிகளில் போலீஸார் கடந்த சில தினங்களாக அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று செம்மரங்களை வெட்டி அதை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 14 பேர் பிடிபட்டனர்.

அவர்களுடன் முக்கிய குற்றவாளியான சாகுல் பாய் என்பவரது ஆதரவாளரான சிவலிங்கம் என்பவரும் பிடி பட்டார். அவர்களிடம் இருந்து கடத்துவதற்காக வைக்கப்பட் டிருந்த 41 செம்மரக் கட்டைகளை யும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த வனப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in