தெரியாமல் எல்லை தாண்டினால் கைது இல்லை: இந்தியா-பாகிஸ்தான் முடிவு

தெரியாமல் எல்லை தாண்டினால் கைது இல்லை: இந்தியா-பாகிஸ்தான் முடிவு
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தெரியாமல் இரு நாட்டு மக்களில் யாரேனும் எல்லை தாண்டினால் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின், ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்களுக்கு இடையிலான சந்திப்பு 14 ஆண்டுகளுக்குப் பிறகு, வாகா எல்லையில் கடந்த 24-ஆம் தேதியன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 5 நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இன்றைய கூட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தெரியாமல் இரு நாட்டு மக்களும் எல்லை தாண்டினால் அவர்களை கைது செய்யாமல் உடனடியாக திருப்பி அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, எல்லையில் கடத்தலை முற்றிலுமாக கட்டுப்படுத்துவது, சட்டவிரோத கட்டடங்கள் எழுப்பப்படுவதை நிறுத்துவது, தொடர்பாக உடன்பாடுகள் எட்டப்பட்டதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in