Last Updated : 24 May, 2017 06:53 PM

 

Published : 24 May 2017 06:53 PM
Last Updated : 24 May 2017 06:53 PM

நேபாள பிரதமர் பிரசண்டா திடீர் ராஜினாமா

அதிகார பகிர்வு ஒப்பந்தத்துக்கு மதிப்பு அளித்து நேபாள பிரதமர் பிரசண்டா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

நேபாளி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அந்நாட்டின் 39-வது பிரதமராக கடந்த 2016, ஆகஸ்ட் 3-ம் தேதி பிரசண்டா பதவியேற்றுக் கொண்டார். நேபாள கம்யூனிஸ்ட் தலைவரான பிரசண்டா அப்போது கூட்டணியில் இருந்த நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொண்டார். அதில் 9 மாதங்களுக்கு பின் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிகாரத்தை ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தனது பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக நேபாளி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு கட்சிகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தத்தின்படி வரும் 2018-ம் ஆண்டு வரை மாறி, மாறி ஆட்சியில் அமர்வார்கள் என கூறப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x