

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவை யில் நேற்று கூறியதாவது:
நைஜீரிய மாணவர்கள் தாக்கப் பட்ட சம்பவம் குறித்து உத்தர பிரதேச அரசிடம் விரிவான அறிக்கை கோரியுள்ளோம். இது தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமும் தொலைபேசி யில் பேசியபோது, இந்த விவகாரத் தில் நேர்மையான விசாரணை நடத் தப்படும் என்று உறுதியளித்தார்.
விசாரணை முடியும் வரைக் கும் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. யார் தவறு செய்திருந்தா லும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.