Last Updated : 02 May, 2017 01:50 PM

 

Published : 02 May 2017 01:50 PM
Last Updated : 02 May 2017 01:50 PM

உலக வெப்பமயமாதல்: இந்தியப் பெருங்கடலின் ஆச்சரியங்கள்

உலக வெப்பமயமாதல் காரணமாக உலகளவில் கடலின் மட்டம் உயர்ந்து கொண்டு வருகிறது. ஆனால் இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களைப் பொறுத்தவரை இது சற்று முரணாக அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்தியாவின் தேசிய கடல்சார் நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டுவரை செயற்கைக்கோள்கள் மூலம் வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி கண்காணிக்கப்பட்டது. இதில் 1993 முதல் 2004-ம் ஆண்டு வரை இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதிகள் கடலின் வீழ்ச்சி அடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2004- ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பெருங்கடலின் கடலின் மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றம் கண்டுள்ளது.

பசுமை இல்லா வாயுக்கள் காரணமாக உலக அளவில் கடலின் வெப்பநிலை உயர்ந்து கடல்களின் மட்டம் உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சில கடல்களின் மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது. ஆனால் இந்தியப் பெருங்கடலை பொறுத்தவரை இது சற்று வேறுபட்டு காணப்படுகிறது.

நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்திய பெருங்கடலின் அலைகளின் வீச்சு அட்லாண்டிக், பசுபிக் கடல்களில் நாங்கள் கவனித்ததை விட தனித்துவம் பெற்று காணப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்டார்டிக் மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மைய இயக்குனர் ரவிசந்திரன் கூறும்போது, 2004 -ம் ஆண்டுக்கு பிறகு இந்திய கடல் பகுதிகள் மற்ற கடல்களைவிட இருமுறை வெப்பமடைந்துள்ள காரணத்தை நாங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறோம். வளிமண்டல வெப்பத்தால் பனிப்பாறைகள் உருகி கடல்களின் மட்டம் அதிகரிக்கிறது. இதில் வெப்பமயமாதல் காரணமாக கடலில் ஏற்படும் 70% விரிவாக்கத்தை எங்களால் விளக்க முடியும்.

காற்றின் பாய்ச்சல் காரணமாக இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பில் உள்ள தண்ணீரில் காற்று ஊடுருவி திசையை மாற்றியமைக்கிறது. மேலும் இது கடலின் மட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக வரும் காலங்களில் கடல் மட்டங்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் இதனை உறுதியாக கூற முடியாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x