Published : 06 Jun 2017 08:34 AM
Last Updated : 06 Jun 2017 08:34 AM

லஞ்ச அதிகாரியிடம் இருந்து பணத்தை மீட்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு

ஆந்திராவில் அரசு துறைகளில் மலிந்து கிடக்கும் லஞ்சத்தை முழுமையாக களையெடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல்வர் சந்திரபாபு நாயுடு புதுமையான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் லஞ்சம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 1100 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புக் கொண்டு புகார் தெரிவித்தாலே போதும், உடனடியாக நடவடிக்கை பாயும் என அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த திட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என கருதி அரசு அதிகாரிகள் பலர் வழக்கம்போல லஞ்சம் பெற்று வந்துள்ளனர். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் சிலர் 1100 எண்ணைத் தொடர்புக் கொண்டு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இதுவரை 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பெற்ற லஞ்சப் பணமும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அரசு அலு வலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தற்போது பீதியில் ஆழ்ந்துள்ளனர். அதேசமயம் பொதுமக்கள் மிகுந்த உற்சாக மடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x