

நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் நடத்திய சோதனையில் 141.13 கோடி அளவுக்கு புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
இதுகுறித்து மக்களவையில் ஜேட்லி மேலும் கூறும்போது, “இந்தத் தொகையில் ரூ.110 கோடி வருமான வரித் துறையாலும் ரூ.4.54 கோடி அமலாக்கத் துறையாலும் ரூ.26.21 கோடி சிபிஐயாலும் ரூ.38 லட்சம் வருவாய் புலனாய்வுப் பிரிவாலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் அனைத்து எஸ்பிஐ மற்றும் பிற நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பணம் மீண்டும் புழக்கத்துக்கு வரும்.
கறுப்புப் பணம் பதுக்கல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் போதிய அதிகாரிகளுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றன” என்றார்.