

ஜமாத் உல் முஜாகிதீன் பங்களா தேஷ் போன்ற தீவிரவாத அமைப்பு களை சமாளிக்க வேண்டியிருப்ப தால், தேசிய புலனாய்வுப் பிரிவு (என்ஐஏ) அதிகாரிகள் உருது, அரபி மற்றும் பாரசீக மொழிகளை பயிலத் தொடங்கியுள்ளனர்.
கடந்த, 2014-ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத் துக்குப் பின்னரே, அரபி, உருது மற்றும் பாரசீக மொழிகளில் அடிப் படை அறிவு இருக்க வேண்டிய அவசியத்தை தேசிய புலனாய்வுப் பிரிவினர் உணர்ந்தனர்.
குண்டுவெடிப்பு குறித்த விசாரணையின் போது, ஏராளமான துண்டு அறிக்கைகள், காகிதக் கட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவை யாவும், பாரசீகம், உருது மற்றும் அரபி மொழிகளில் இருந்ததால், மொழி தெரியாமல் புலனாய்வு அதிகாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
ஒவ்வொரு முறையும் அதற்கென உள்ள மொழிபெய்ர்ப்பாளரை தேடிப்பிடித்து விளக்கம் பெற வேண்டியிருந்தது. தேசிய புலனாய்வு அதிகாரிகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் தாய் மொழிகளை ஏற்கெனவே தெரிந்து வைத்திருப்பார்கள். தற்போது கூடுதலாக சில மொழிகளை கற்பதன் மூலம், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எளிதாக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக பாரசீகம், அரபி மற்றும் உருது மொழிகளை கற்பிக்கக் கோரி, தேசிய புலனாய்வு பிரிவின் எஸ்பியாக கொல்கத்தாவில் பணியமர்த்தப்பட்டுள்ள விக்ரம் கலேட், கொல்கத்தா பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளார்.