இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சலுகைகள்- கர்நாடகாவில் குறைந்த வட்டியில் கடன், விவசாய கடன் தள்ளுபடி

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சலுகைகள்- கர்நாடகாவில் குறைந்த வட்டியில் கடன், விவசாய கடன் தள்ளுபடி
Updated on
1 min read

கர்நாடகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு அதிகப்படியான கடன் மற்றும் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இயற்கை விவசாய‌ விளைபொருள் விற்பனை நிலையத்தை பிரபலப்படுத்தும் வகையில் இயற்கை வேளாண் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஞாயிறு வரை நடைபெறும் இக்கண்காட்சியைப் பார்வையிட்ட வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கூறிய தாவது:

நாடு முழுவதும் இயற்கை விவசாயம் நடைபெறும் மாநிலங்கள் வரிசையில் கர்நாடகம் முன்னிலையில் இருக் கிறது. மாநில அரசு, விவசாயப் பல்கலைக் கழகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இயற்கை விவசாயத்தின் மேன்மையை தொடர்ந்து விவசா யிகள் மத்தியில் கொண்டு சென்றதால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனி வரும் காலங்களிலும் இயற்கை விவசா யத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இதன்படி பெங்களூர், மைசூரைத் தொடர்ந்து மற்ற 6 நகரங்களில் இந்த ஆண்டில் இயற்கை வேளாண் விளை பொருள் விற்பனை நிலையங்கள் தொடங்கப்படும். இதற்காக, மத்திய அரசு ரூ.24 கோடியும் மாநில அரசு ரூ.36 கோடியும் நிதி ஒதுக்கி உள்ளது.

செயற்கை உரங்களால் விளைவித்த விளைபொருள் களைக் காட்டிலும், இயற்கை விவசாயத்தில் விளைந்த விளைபொருள்களில்தான் கூடுதல் ஊட்டச்சத்து இருக்கும். இயற்கை விவசாயமே மண்ணுக்கும் மக்களுக்கும் உகந்தது.

எதிர்கால சந்ததியினர் வளமுடனும் நலமுடனும் வாழ வேண்டுமென்றால் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவு வகை களையே உட்கொள்ள வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.

கர்நாடகாவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை விவசாயி களுக்கு குறைந்த வட்டியில் அதிக கடன், குறிப்பிட அளவிலான விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in