

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பிஹார், மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் ஏ.சி.நீல்சன், ஏ.பி.பி. நியூஸ் சார்பில் பொது மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த மக்களவைத் தொகுதிகள் 48 ஆகும். இதில் பாஜக கூட்டணி 31 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 13 இடங்கள் கிடைக்கும். ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும். மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை ஓர் இடத்தில் வெற்றி பெறும்.
பிஹார் மாநிலத்தின் மொத்த மக்களவைத் தொகுதிகள் 40. இதில் பாஜக- லோக் ஜனசக்தி கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ்- ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி 12 இடங்களைப் பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 28 இடங்களையும் இடதுசாரிகள் 10 இடங்களையும் காங்கிரஸ் 3 இடங் களை யும் பாஜக ஓர் இடத்தையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.