Last Updated : 09 Aug, 2016 10:28 AM

 

Published : 09 Aug 2016 10:28 AM
Last Updated : 09 Aug 2016 10:28 AM

1,000 பசுக்கள் இறந்த விவகாரத்தில் ராஜஸ்தான் அரசுக்கு எதிராக நடவடிக்கை: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநில கோசாலையில் 1000 பசுக்கள் இறந்த விவகாரத்தில் மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி வலியுறுத்தினார்.

மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் பிரமோத் திவாரி பேசும்போது, “ஜெய்ப்பூர் நகரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் மாநகராட்சியின் ஹிங்கோனியா பசு காப்பகம் உள்ளது. இங்கு 1000 பசுக்கள் இறந்துள்ளன. பசுவை காப்பதாக கூறிக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறுகிறார்.

ராஜஸ்தானில் பசுக்களைக் கொன்றவர்களின் பெயர் மற்றும் முகவரி தந்து உதவிட நான் தயாராக உள்ளேன். இந்தப் படுகொலைக்கு ராஜஸ் தான் அரசே காரணம். எனவே ராஜஸ்தான் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோசாலை ஒப்பந்த ஊழியர்கள் 266 பேரும் 2 மாத ஊதிய நிலுவை கேட்டு கடந்த ஜூலை 21 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பராமரிப்பின்றி மழைநீர் சகதியில் சிக்கிக் கொண்டும் பட்டினியாலும் பசுக்கள் இறந்துள்ளன. பசுக்களை ராஜஸ்தான் அரசு திட்டமிட்டு கொன்றுள்ளது” என்றார்.

பிரமோத் திவாரி மேலும் பேசும் போது, “பிரதமர் மோடி வாக்கு கேட்டு வரும்போது, தலித் பாது காப்பு குறித்து பேசுகிறார். ஆனால் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித், சிறுபான்மையினர் கொல் லப்படுவதற்கு அவர் கவலை தெரி விப்பதில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x