டெல்லி, பஞ்சாப் ரயில் நிலையங்களில் கேஜ்ரிவாலிடம் வளையலை காட்டி பாஜக, காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

டெல்லி, பஞ்சாப் ரயில் நிலையங்களில் கேஜ்ரிவாலிடம் வளையலை காட்டி பாஜக, காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற் காக பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். நான்கு நாள் பயணமாக பஞ்சாப் செல்ல நேற்று காலை 7 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு வந்தார்.

அப்போது அங்கு வந்த டெல்லி பாஜக மகளிர் அணித் தலைவி கமல்ஜீத் ஷெராவத், பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் கபூர் மற்றும் தொண்டர்கள் கேஜ்ரிவா லுக்கு எதிராக கோஷம் எழுப் பினர். திடீரென கேஜ்ரிவாலிடம் வளையலைக் காட்டி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்ஆத்மி எம்பி, எம்எல்ஏக் கள் தரக்குறைவாக நடந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரி வித்து இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அங்கிருந்த போலீஸார் மற்றும் பாதுகாவலர்கள் அவர் களை அப்புறப்படுத்த முயற்சித்த னர். அப்போது பாஜக.வினருக்கும் போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கேஜ்ரிவாலையும் பாஜக.வினர் சூழ்ந்துகொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.

ஒருவழியாக பஞ்சாப் ரயிலில் கேஜ்ரிவால் சென்றார். லூதியானா ரயில் நிலையத்தில் கேஜ்ரிவால் இறங்கினார். அங்கும் ஆளும் அகாலி தள இளைஞர் அணி தொண்டர்கள் கேஜ்ரிவா லுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷ மிட்டனர். தவிர எதிர்க்கட்சியான காங்கிரஸ் மகளிர் அணி தொண்டர் களும் அங்கு கூடி கேஜ்ரிவாலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது, அகாலி தள இளைஞர் அணி தலைவர் குர்பிரீத் சிங் கோஷா, கேஜ்ரிவாலிடம் வளையல்களைத் தர முயற்சித் தார். இதனால் பஞ்சாபிலும் பரபரப்பு ஏற்பட்டது. அர்விந்த் கேஜ்ரிவால்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in