மோடியை எதிர்த்து போட்டியிடத் தயார்: திக்விஜய் சிங்

மோடியை எதிர்த்து போட்டியிடத் தயார்: திக்விஜய் சிங்
Updated on
1 min read

வாரணாசி தொகுதியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்து போட்டியிடத் தயார் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்தால் மோடியை எதிர்த்து போட்டியிடத் தயாராக உள்ளேன் என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடிக்கு வாரணாசி தொகுதி போட்டியிட உள்ளதாக அந்த கட்சி தலைமை அறிவித்தவுடன், அந்தத் தொகுதி மக்கள் விரும்பினால், மோடியை எதிர்த்துப் போட்டியிட தயாராக உள்ளதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் அந்தத் தொகுதியில் வலிமை மிக்க வேட்பாளர் ஒருவரை நிறுத்த பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in