

சண்டீகரில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்கள் பிரதமர் மோடியுடன் தாராளமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு மோடியும் மகிழ்ச்சி யாக ஒத்துழைப்புக் கொடுத்தார்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த மோடி சுமார் 25 நிமிடம் பேசினார். பின்னர், மேடையிலிருந்து இறங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்ற 150 மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடினார்.
மாற்றுத் திறனாளிகளில் பலர் சக்கர நாற்காலியில் இருந்தபடி யோகாசனம் செய்தனர். அவர்களில் 16 பேர் ராணுவத்தில் பணி புரிந்தவர்கள். பல்வேறு ராணுவ நடவடிக்கைகளின்போது காய மடைந்து உடல் உறுப்புகளை இழந்தவர்கள்.
தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் யோகாசனம் செய்ததை சுற்றிப் பார்த்தார். பின்னர், தானும் யோகாசனம் செய்தார்.
விவிஐபி-களுக்கான இடத்தில் யோகா செய்யாமல், அங்கிருந்து விலகி மற்றவர்கள் யோகா செய்யும் பின்வரிசைக்குச் சென்று அங்கு யோகாவில் ஈடுபட்டார். சுமார் 25 நிமிடங்கள் யோகா செய்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும், பங்கேற் பாளர்களுடன் இயல்பாக கலந்து விட்டார். மோடியைச் சுற்றிலும் பங்கேற்பாளர்கள் குவிந்து விட்டனர். அவர்கள் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்பினர். அவர்களை மோடி தாராளமாக அனுமதித்தார்.