Last Updated : 28 Oct, 2015 09:30 AM

 

Published : 28 Oct 2015 09:30 AM
Last Updated : 28 Oct 2015 09:30 AM

சீக்கிய புனித நூல் அவமதிப்பு எதிரொலி: பொற்கோயிலில் தீபாவளி இல்லை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தல மான பொற்கோயிலில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டா டப்படமாட்டாது என அறிவிக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு (எஸ்ஜிபிசி) தலைவர் அவதார் சிங் மக்கார் கூறும்போது, “குரு கிரந்த் சாஹிப் (புனித நூல்) அவமதிக்கப்பட்டது தொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை யடுத்து, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடு வதில்லை என்று முடிவு செய்துள் ளோம். எனவே, தீபாவளியை முன்னிட்டு பொற்கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட மாட்டாது. பட்டாசுகளும் காட்சிக்கு வைக்கப்பட மாட்டாது” என்றார்.

மேலும் இந்த தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று சீக்கியர்களை கேட்டுக்கொண் டுள்ள எஸ்ஜிபிசி, அதேநேரம் அகல் விளக்கேற்றலாம் என்று தெரிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள சீக்கிய புனிதத் தலங் களை நிர்வகித்து வரும் எஸ்ஜிபிசி, சீக்கியர்களின் சிறிய நாடாளு மன்றமாக கருதப்படு வது குறிப் பிடத்தக்கது.

கடந்த 30 ஆண்டுகளில் பொற் கோயிலில் தீபாவளி பண்டிகை புறக்கணிக்கப்படுவது இது 3-வது முறை. இதற்கு முன்பு, 1984-ல் மத்திய அரசின் புளு ஸ்டார் நடவடிக் கையைக் கண்டித்து தீபாவளி கொண்டாடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x