

உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை 33 லட்சம் வழக்குகள் அடுத்த விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் நிலுவையில் உள்ளன.
தேசிய நீதித்துறை தகவல் கட்டமைப்பு (என்ஜேடிஜி) நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் சுமார் 3 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. அவற்றில் உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை 33,57,575 வழக்குகள் அடுத்த விசாரணை தேதி குறிப்பிடப் படாமல் நிலுவையில் உள்ளன.
இதில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நீதிபதிகளின் பற்றாக்குறை காரணமாக நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.