Last Updated : 27 Jun, 2016 07:57 AM

 

Published : 27 Jun 2016 07:57 AM
Last Updated : 27 Jun 2016 07:57 AM

சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தீவிரவாத தாக்குதல்: காஷ்மீருக்கு களங்கம் ஏற்படுத்தவே உதவும் - உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மெகபூபா வேதனை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களால் எந்தப் பயனும் கிடைக்காது என்றும் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மட்டுமே உதவும் என்றும் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில் பாம்பூர் அருகே நேற்று முன்தினம் சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 8 வீரர்களும் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மாநில முதல்வர் மெகபூபா முப்தி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: தங்கள் கடமையை மட்டுமே செய்துவரும் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட இந் தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. புனிதமான இந்த ரம்ஜான் மாதத்தில், பொதுமக்கள் கடந்த காலத்தில் தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோர வேண்டும். இந்தத் தருணத்தில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற தீவிரவாத தாக்கு தல் சம்பவங்களால், வருமானம் ஈட்டித் தரும் குடும்பத் தலைவனை இழந்து பல குடும்பங்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

தாக்குதல் நடத்துவதால் தீவிரவாதிகளால் எதையும் சாதிக்க முடியாது. மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த மட்டுமே இந்த செயல் உதவும்.

தீவிரவாத தாக்குதல் சம்பவங் கள் தொடர்கதையாக இருப்பதால் சுற்றுலா பாதிக்கப்படுவதுடன் முதலீடும் பாதிக்கப்படுகிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சி

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கூறும்போது, “தீவிரவாதி களுடான சண்டையில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பாராட்டுகளையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். தாக்குதல் நடந்த பகுதிக்கு ஒரு குழு அனுப்பி வைக் கப்படும். இதன்மூலம் அங்குள்ள குறைபாடுகளை அறிந்து அதைக் களைய நட வடிக்கை எடுக்கப்படும். நம் நாட்டை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகளும், நமது அண்டை நாடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தீய சக்திகளின் சவாலை சமாளிக்க துணிச்சல் மிக்க இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x