

டிவி சேனல்களில் வெளியாகும் செய்திகளை நெறிப்படுத்த ஒரு தனிப்பட்ட அமைப்பை உருவாக்குமாறு மத்திய அரசுக்கும், இந்திய பிரஸ் கவுன்சிலுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிவி சேனல்களில், கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் சில நேரங்களில் பார்ப்பவர்களை தவறாக இட்டுச்செல்லும் செய்திகளும், நிதர்சனத்துக்கு அப்பாற்பட்ட செய்திகளும் வெளியாகின்றன. அவற்றை தடுக்க ஒரு ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில், இந்து ஜாக்ரிதி சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல மனு ஒன்று தொடரப்பட்டது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் , இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும், சட்ட அமைச்சகத்துக்கும் விளக்கமளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.