Published : 27 Mar 2017 03:17 PM
Last Updated : 27 Mar 2017 03:17 PM

பாஜகவில் இணைந்த டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ

வடமேற்கு டெல்லி எம்எல்ஏ வேத் பிரகாஷ் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிகழ்வு முறையான விழாவாக பாஜக சார்பில் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டது.

பவானா பகுதியில் இருந்து ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ வேத் பிரகாஷ். இவர் ஆம் ஆத்மி தலைமை மீது ஏமாற்றத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தன் தொகுதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் வேத் பிரகாஷுக்கு மறுக்கப்பட்டதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ஊடகங்கள் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி முன்னிலையில், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் வேத் பிரகாஷ் முறையாக பாஜகவில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி தரப்பில் கேட்டபோது, வேத் பிரகாஷ் கட்சியில் இருந்து வெளியேறியதாகவும், அவர் கட்சி உறுப்பினர் பதவியிலும் இல்லை என்று கூறப்பட்டது. மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x