Last Updated : 12 Apr, 2017 10:17 AM

 

Published : 12 Apr 2017 10:17 AM
Last Updated : 12 Apr 2017 10:17 AM

பசுக்களை கடத்தியதாக ஒருவர் கொலை: ராஜஸ்தானில் 16 பேர் கைது

பசுக்களைக் கடத்தியதாக கூறி ஒரு கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி பசுக்களைச் சிலர் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அந்தப் பசுக்களைக் கடத்தி செல்வதாக கூறி, ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது.

வாகனங்களில் சென்றவர் களில் 5 பேரை அந்த கும்பல் பிடித்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இதில் பெஹ்லு கான் என்பவர் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.

பின்னர் கடந்த 3-ம் தேதி மருத்துவமனையில் கான் இறந்தார். இந்த வழக்கில் போலீஸார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை அதிகாரி பர்மல் குர்ஜார் கூறும்போது, ‘‘பசுக்களைச் சட்டவிரோதமாக கடத்தியதாக 11 பேரும், பெஹ்லு கான் கொலை வழக்கு தொடர்பாக 5 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தேடி வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x