ஆளும் திரிணமூல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகார்: 72 மணி நேரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் - சிபிஐ.க்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆளும் திரிணமூல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகார்: 72 மணி நேரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் - சிபிஐ.க்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மேற்குவங்கத்தில் நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில், 72 மணி நேரத்துக்குள் பூர்வாங்க விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று சிபிஐ.க்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், அதிகாரிகள் என பலர் லஞ்சம் வாங்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. நாரதா நியூஸ் என்ற பெயரில் இயங்கி வரும் செய்தி இணையதளத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் ரகசிய கேமராவில் (ஸ்டிங் ஆபரேஷன்) திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டனர். இதனால் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

போலியான நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படும்படி கூறி அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை அவர்கள் வாங்கிக் கொண்டதாக வும் இணையதளத்தில் செய்தி கள் மற்றும் வீடியோக்கள் வெளி யாயின. இதையடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 3 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதில், நாரதா ஸ்டிங் ஆபரேஷன் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த வழக்குகளை கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) நிஷிதா மாத்ரே, நீதிபதி தபபிரதா சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கு, நீதிமன்ற பிடியாணை இன்றி கைது செய்வதற்குரிய குற்றமாகத் தெரிகிறது. இந்த வழக்கில் எம்.பி.க்கள், அமைச்சர் கள், அரசு உயரதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, இதுகுறித்து 72 மணி நேரத்தில் சிபிஐ பூர்வாங்க விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். விசாரணை முடிவில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் மாநில போலீ ஸார் கைப்பாவைகளாக உள்ளனர். இந்த வழக்கில் முறையான விசா ரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வரு கின்றனர். எனவே, சிபிஐ விசா ரணையை விரைந்து முடிக்க வேண்டும். ஸ்டிங் ஆபரேஷனுக்கு பயன்படுத்திய பொருட்கள் நீதி மன்றத்தின் பாதுகாப்பில் உள்ளன. அவற்றை 24 மணி நேரத்துக்குள் சிபிஐ பெற்றுக் கொள்ளலாம்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எம்.எச்.மிர்சாவை, 24 மணி நேரத்துக்குள் பணியிடை நீக்கம் செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவில் மிர்சாவும் இருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்காக பணம் வாங்குவது நான்தான் என்று மிர்சா கூறும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.)

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in