

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் லக்னோவில் நேற்று நடந்தது.
சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங், அவரது சகோதரர் சிவ்பால் சிங் ஆகிய இருவரும் இக்கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், ‘‘கட்சியில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 30-க்குள் நடத்தி முடிக்கப்படும்’’ என்றார்.
இந்தக் கூட்டத்தின்போது கட்சிக் குள் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவும், வரும் ஏப்ரல் 15 முதல் அதிக அளவில் தொண்டர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.