

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் பிரிவு டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அணு சக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு:
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலை யில் ஏற்பட்ட டர்பைன் கோளாறு காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டது. இதையடுத்து, ரஷ்ய விஞ்ஞானிகளின் பரிந்துரை அடிப்படையில் டர்பைனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதால் டிசம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்ததாக நிறுவப்பட்டு வரும் 2-வது அணு உலையில் இது போன்ற பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.