

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம் ஷெட்பூர் நகரில் 43 வயது பெண் ஒருவர் மர்ம நபர்களால் நேற்று முன்தினம் இரவு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இவர் அம்மாநில முதல்வர் ரகுவர் தாஸின் உறவினர் என்று கூறப் படுகிறது. கெம்லதா தேவி என்ற இப்பெண், ஜாம்ஷெட்பூர் நகரின் கடமா பகுதியில் வசித்து வந்தார். அவரது கணவர் கார்த்திக் ராம், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வீட்டுக்கு வந்தார். அப்போது கெம்லதா தேவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந் தார். கொலையாளிகள் வீட்டில் இருந்து 2 மொபைல் போன்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
-