Last Updated : 04 Feb, 2017 08:03 AM

 

Published : 04 Feb 2017 08:03 AM
Last Updated : 04 Feb 2017 08:03 AM

சசிகலாவுக்கு பொதுச் செயலாளர் பதவி: தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க பரிசீலனை - ஆவணங்கள் கேட்டு அதிமுகவுக்கு கடிதம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக சில ஆவணங்கள் கேட்டு அக்கட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கான அடுத்த தேர்தல் ஆகஸ்ட் 29, 2019-ல் நடைபெற வேண்டிய நிலையில், கடந்த ஆண்டு, டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுக்குழு அவசரமாகக் கூடியது. இதில் சட்டதிட்ட விதி 20-ன் பிரிவு 2-ல் கூறியபடி வி.கே.சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததுடன், அப்பதவிக்கான முழு அதிகாரமும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம், அதிமுக தலைமை நிலையச் செய லாளர் பி.பழனியப்பன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் முறையாக பரிசீலித்து, அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலாவை அங் கீகரித்து, அக்கட்சிக்கு தெரிவிக்கும். இதன் பிறகுதான் சசிகலா அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக கருதப்படு வார். ஆனால் இந்தப் பரிசீல னையை தேர்தல் ஆணையம் இன்னும் முடிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட சில ஆதாரங்கள் கொண்ட ஆவணங்கள் கேட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறும்போது, “அதிமுக பொதுக் குழுவால் புதிய பொதுச் செயலா ளராக சசிகலா தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அக்கட்சியிடமிருந்து கடிதம் வந்துள்ளது. இதன் மீதான பரிசீலனை இன்னும் முடிய வில்லை. இதற்காக செய்யப்பட்ட சட்டத்திருத்தம் உட்பட சில தஸ்தாவேஜ்கள் கேட்டு அதிமுகவுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் அனுப்பியுள்ளோம். இதற்கிடையில், புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந் தெடுக்கப்பட்டதற்கு எதிராக, அக்கட்சி எம்.பி. சசிகலா புஷ்பா புகார் அளித்துள்ளார். இப்புகாருக் கும் விளக்கம் கேட்டு அதன் நகல் அதிமுகவுக்கு அனுப்பப்பட் டுள்ளது. இவ்விரண்டுக்கும் பதில் பெற்று பரிசீலனை முடிந்த பின்னரே அதிமுகவின் பொதுச் செய லாளராக ஆணையத்தால் சசிகலா ஏற்கப்படுவார்” என்று தெரிவித் தனர். அதிமுகவுக்கு 23 புதிய நிர்வாகிகளை சசிகலா நேற்று அறிவித்துள்ளார். சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி, தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டால் மட்டுமே இந்த அறிவிப்பு செல்லும் எனக் கருதப்படுகிறது.

அதிமுக மீது சசிகலா புஷ்பா புகார் அளித்ததுபோல், கடந்த 2015, நவம்பரில் மனிதநேய மக்கள் கட்சி மீது அதன் முன்னாள் தலைவர் தமீம் அன்சாரி புகார் அளித்தார். இதில், புதிய தலைவராக எம்.ஹெச். ஜவாஹிருல்லா தேர்ந்தெடுக் கப்பட்டது முறையல்ல என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் கடந்த 2016, மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மமகவுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அன்சாரியின் புகார் மீது விளக்கம் கேட்டு மமகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதில் பெறப்பட்ட பதிலில் திருப்தி அடைந்த தேர்தல் ஆணையம், புதிய தலைவராக ஜவாஹிருல்லாவை அங்கீகரித்து மமகவுக்கு சின்னமும் ஒதுக்கியது.

தேர்தல் ஆணையம் முறையாக பரிசீலித்து, அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை அங்கீகரித்து, அக்கட்சிக்கு தெரிவிக்கும். இதன் பிறகுதான் சசிகலா அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக கருதப்படுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x