

பல்வேறு சலுகைகளைப் பெறுவதில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, மூத்த குடிமக்களுக்கான வயதை 60 ஆக நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டத்தில் (2007) திருத்தம் கொண்டுவர மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியர் கள் மூத்த குடிமக்கள் என இப்போதுள்ள மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனால், சில அரசுத் துறைகள் அல்லது தனியார் நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கான சலுகையைப் பெறுவதற்கான வயதை 62, 63 என தங்கள் விருப்பம் போல நிர்ணயம் செய்துள்ளன.
உதாரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் கட்டணச் சலுகையைப் பெறுவதற்கான வயதை 63 ஆக நிர்ணயம் செய்திருந்தது.
இந்த விவகாரம் குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் சமூக நீதி அமைச்சகம் புகார் செய்திருந்தது. இதையடுத்து மூத்த குடிமக்கள் கட்டண சலுகை பெறுவதற்கான வயது கடந்த வாரம் 60 ஆகக் குறைக்கப்பட்டது.
எனவே, அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங் களில் மூத்த குடிமக்கள் வயதை ஒரே மாதிரியாக (60) நிய மிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.