

மதுரா நகரின் ஜவஹர் பாக் பகுதியில் கடந்த 2-ம் தேதி அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை போலீஸார் அகற்ற முயன்றனர். அப்போது போலீஸார் ஆக்கிரமிப்பாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர். வன் முறையை தூண்டியதாக கூறப்படும், ‘ஆசாத் பாரத் விதிக் வைசாரிக் கிரந்தி சத்யாகிரகி’ என்ற ஆன்மீக அமைப்பின் தலைவரான ராம் விரிகிஷ் யாதவ், போலீஸாருடன் நடந்த மோதலில் உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்தன் போஸ் மற்றும் அவரது மனைவியை, பஸ்தி மாவட்டம், பரசுராம்பூர் பகுதியில் உள்ள கைத்வாலியா என்ற கிராமத்தில் மதுரா போலீஸார் நேற்று கைது செய்தனர்.