

அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று இலக்குகளைத் தாக்கும் தனுஷ் ஏவுகணை நேற்று சோதனை செய்து பார்க் கப்பட்டது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் காலை 10.40 மணி அளவில் அணு ஆயுதங்களை ஏந்தி இலக்குகளைத் தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை பரிசோ தித்துப் பார்க்கப்பட்டது. அந்தப் பரிசோதனை வெற்றி கரமாக முடிந்ததாக ராணுவம் கூறியது.
பின்னர் மாலை 7.40 மணி அளவில் வங்கக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய கடற்படைக்குச் சொந்த மான கப்பலில் இருந்து கடற் படை ஏவுகணையான தனுஷ் பரிசோதித்துப் பார்க்கப் பட்டது. அதுவும் வெற்றி கரமாக முடிவடைந்திருப் பதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
சுமார் 500 முதல் 1000 கிலோ எடையுள்ள ஆயுதங்களை ஏந்திச் சென்று இலக்குகளைத் தாக்கும் இந்த தனுஷ் ஏவுகணை தரை மற்றும் கடல் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.