ரயில் வளாகங்களில் இருந்து 1,261 சிறுவர்கள் மீட்பு

ரயில் வளாகங்களில் இருந்து 1,261 சிறுவர்கள் மீட்பு
Updated on
1 min read

நாடு முழுவதிலும் உள்ள ரயில் வளாகங்களில் இருந்து இந்த ஆண்டு ஜூலை மாதம் 1,200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ரயில்வே பாதுகாப்பு படை மீட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே பாது காப்பு படை சார்பில் நேற்று வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காணாமல் போன மற்றும் ஆதர வற்ற குழந்தைகளை மீட்கும் வகையில் ‘ஆபரேஷன் முஸ்கான்-2’ என்ற பிரச்சாரத்தை மத்திய உள் துறை அமைச்சகம் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மேற்கொண்டது. இந்த காலகட்டத் தில் ரயில்கள் மற்றும் ரயில் நிலை யங்களில் இருந்து மொத்தம் 1,261 குழந்தைகளை (கடத்திச் செல்லப் பட்ட 18 குழந்தைகள் உட்பட) ரயில்வே பாதுகாப்பு படை மீட்டுள்ளது.

ரயில்கள், ரயில் நிலையங்களில் குழந்தைகள் மீது அதிக அக்கறை மற்றும் பாதுகாப்பு அளிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடை முறைகளை (எஸ்ஓபி) ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி வெளியிட்டது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு அமைச்சகம், குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த எஸ்ஓபி வெளி யிடப்பட்டது.

20 ரயில் நிலையங்களில் இந்த எஸ்ஓபி ஏற்கெனவே நடைமுறை யில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in