உட்தா பஞ்சாப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் என்ஜிஓ வழக்கு

உட்தா பஞ்சாப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் என்ஜிஓ வழக்கு
Updated on
1 min read

'உட்தா பஞ்சாப்' திரைப்படத்துக்கு எதிராக பஞ்சாபில் இருந்து இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீத்மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மத்திய தணிக்கை வாரியத்துடனான சிக்கல்கள் தீர்ந்து மும்பை நீதிமன்றம் அளித்த ஒரே வெட்டு, மூன்று பொறுப்பு துரப்பு வாசகங்களுடன் படத்தை வெளியிட அனுமதி பெற்றிருக்கிறது திரைக்குழு.

இந்நிலையில், பஞ்சாபைச் சேர்ந்த மனித உரிமைகள் விழிப்புணர்வு கூட்டமைப்பு (Human Rights Awareness Association) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமானது உச்ச நீதிமன்றத்தில் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஆதர்ஷ் குமார் கோயெல் அடங்கிய உச்ச நீதிமன்ற விடுமுறை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விவசாய மாநிலமான பஞ்சாபை இப்படம் தவறாக சித்தரித்திருப்பதால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய முடிவில் மும்பை உயர் நீதிமன்றம் தலையிட்டிருக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in