Last Updated : 25 May, 2017 01:25 PM

 

Published : 25 May 2017 01:25 PM
Last Updated : 25 May 2017 01:25 PM

மகாராஷ்டிரா முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: அவசரமாக தரையிறக்கியதால் தப்பினார்

மகாராஷ்டிரா முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "லட்டூர் பகுதியில் நான் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. பயப்படத் தேவையில்லை. நானும் என்னுடன் பயணித்தவர்களும் பத்திரமாகவே உள்ளோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்தில் ஹெலிகாப்டருக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு தகவல்களும் பரவிவந்த நிலையில், "ஹெலிகாப்டர் சிறு விபத்துக்குள்ளானது. நான் பத்திரமாக உள்ளேன். வதந்திகளை நம்ப வேண்டாம்.

விபத்தில் பைலட்டுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் நலமுடன் இருக்கிறோம். 11 கோடி மகாராஷ்டிரா மக்களின் ஆசிர்வாதமே இதற்குக் காரணம்.

நான் பயணித்த ஹெலிகாப்டர் புதிதாக வாங்கப்பட்டது. புதிய ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக போலீஸ் அறிக்கை கோரவுள்ளோம்" என செய்தியாளர்களிடம் கூறினார்.

அண்மையில் காட்சிரோலி செல்வதற்காக பட்நவிஸ் இதே ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினார். அப்போதும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து தனது பயணத்தை சாலை வழியாக பட்நவிஸ் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x