செங்கோட்டை தாக்குதல் குற்றவாளியின் மனு விசாரணைக்கு ஏற்பு

செங்கோட்டை தாக்குதல் குற்றவாளியின் மனு விசாரணைக்கு ஏற்பு
Updated on
1 min read

செங்கோட்டையில் 2000 டிசம்பர், 22-ம் தேதி ஆறு லஷ்கர் - இ தொய்பா தீவிரவாதிகள் நுழைந்து ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு வீரர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தீவிரவாதி முகமது ஆரிபுக்கு 2005-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு வெளிப்படையாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி முகமது ஆரிப் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முகமது ஆரிபின் மனுவை விசாரணைக்கு ஏற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in