ஏழுமலையான் கோயில் உண்டியல் வருவாய் ரூ.1,000 கோடியை கடந்தது

ஏழுமலையான் கோயில் உண்டியல் வருவாய் ரூ.1,000 கோடியை கடந்தது
Updated on
1 min read

திருமலையில் உள்ள அன்னமையா பவனில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களின் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், பக்தர்களிடம் நிறை, குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த 2016 ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை ஏழுமலையான் உண்டியலில் பக்தர்கள் ரூ.1,038 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

கடந்த நிதியாண்டில் 2.68 கோடி பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். 10.46 கோடி லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சாம்பசிவ ராவ் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in