

செல்போன் அலைவரிசைக்கான அலைக்கற்றை ஏலத்தை வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. முன்ன தாக இந்த ஏலம் வரும் செப்டம்பர் 29-ல் நடைபெறுவதாக இருந்தது.
தொலைத்தொடர்புத் துறை நேற்று வெளியிட்ட மறு அறிவிப் பில், “செப்டம்பர் 29-ல் தொடங்குவ தாக இருந்த அலைக்கற்றை ஏலம் வரும் அக்டோபர் 1-ல் தொடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் இறுதி வாரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் சிரார்த்த நாட்கள் வருவ தாலும், அலைக்கற்றைகளுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்க ளிடையே அதிக தேவை இருப் பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது.
மொத்தம் 2,345.55 மெகா ஹெர்ட்ஸ் மொபைல் அலைவரி சைகள் அனைத்து அலைவெண் பட்டைகளிலும் (பேண்ட்ஸ்) ஏலம் விடப்பட உள்ளது. இவை, 4ஜி சேவைகளுக்காக பயன்படுத்தப் படும். இந்த ஏலம் மூலம் ரூ.5.63 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைவெண்பட்டை மட்டும் ரூ.4 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் எனக்கூறப்படுகிறது.
அதிக அடிப்படை விலை காரணமாக எதிர்பார்த்த அளவு ஏலம் போகுமா என்ற சந்தேகத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எழுப்பியுள்ளன. எனினும், 700 மெகாஹெர்ட்ஸ் அலைவெண்பட்டை உள்கட்ட மைப்புச் செலவுகளில் 70 சதவீ தத்தை சிக்கனப்படுத்தும் என தொலைத்தொடர்புத் துறை நம் பிக்கை தெரிவித்துள்ளது.