திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி?

திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி?
Updated on
1 min read

திருமண வீட்டார் ரூ.2.5 லட்சம் வரை பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் இன்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.

மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையால் திருமண வைபவங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த சாதாரண மக்கள் பணத்துக்கு பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது.

சலுகையை பெறுவது எப்படி?

திருமண வீட்டார் ரூ.2.5 லட்சம் வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரே ஒரு வங்கிக் கணக்கில் இருந்துதான் ரூ.2.5 லட்சம் எடுக்க முடியும்.

மணமகன், மணப்பெண் அல்லது இவர்களின் பெற்றோர் யாருடைய வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.

அதுமட்டும் அல்லாமல் பணம் எடுப்பவரின் வங்கிக் கணக்கு ( KYC ) கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளரின் தகவல் இடம் பெற்றிருக்க வேண்டும். அதாவது பான் கார்டு போன்ற தகவல்கள் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், திருமணத்துக்காக பணம் எடுக்கும் நபர் தனது திருமண நிகழ்வு தொடர்பாக சுய பிரமாணத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

கேஒய்சி எதற்காக?

வாடிக்கையாளரின் அடையாளம், மற்றொன்று வாடிக்கையாளரின் முகவரி தகவல்களை கேஒய்சி வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது.

பொதுவாக வாடிக்கையாளரின் அடையாளத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் வாடிக்கையாளரின் முகவரி மாற வாய்ப்பிருப்பதால் வங்கிகள் அவ்வப்போது வாடிக்கையாளரின் முகவரியை சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் வாடிக்கையாளரின் பான் கார்டு, ஆதார், ஓட்டுனர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சரி பார்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in