ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: இறுதி வாதம் தொடங்குமா?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: இறுதி வாதம் தொடங்குமா?
Updated on
1 min read

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக் கில் ஆஜராகி வரும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் உடல்நிலை இன்னும் குணமடையாததால் திட்டமிட்டபடி இன்று இறுதிவாதம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 1991-96 காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு இறுதிகட்டத்தை எட்டிய‌தால் அரசு வழக்கறிஞர் பவானி சிங் மார்ச் 7-ம் தேதி தனது இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தர விட்டார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் இறுதிவாதம் மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ​அன்றைய தினமும் பவானி சிங் ஆஜராகவில்லை. அவருக்கு கடுமையான தலைச்சுற்றல் இருப்ப

தால் இறுதிவாதத்தை தொடங்க முடியாது என அவருடைய உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி வேண்டுகோள் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி பவானி சிங் கட்டாயம் தனது இறுதி வாதத்தை தொடங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். எனினும், அவரது உடல்நிலை இன்னும் சீராகவில்லை. ஆனாலும், நீதிபதி கண்டிப்புடன் கூறியதால் பவானி சிங் நீதிமன்றத்துக்கு வர வாய்ப்பு உள்ளது. ஆனால், இறுதிவாதத்தை தொடங்குவாரா என்பது சந்தேகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in