Last Updated : 13 Apr, 2014 03:23 PM

 

Published : 13 Apr 2014 03:23 PM
Last Updated : 13 Apr 2014 03:23 PM

சிலர் சிகிச்சையில், பலர் ஓய்வில்...: டெல்லியில் போட்டியிட்டவர்கள்

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு டெல்லியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சிலருக்கு உடல் நலம் சரியில்லை, பலர் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர்.

டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்து முடிந்தது. இதில், கடுமையாக நிலவிய மும் முனைபோட்டியில் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி உட்பட 150 வேட்பாளர்கள் களம் இறங்கி இருந்தனர்.

இவர்களில், ஆம் ஆத்மியின் சாந்தினி சௌவுக்கில் போட்டி யிட்ட அசுதோஷுக்கு கடுமை யான கால் வலி ஏற்பட்டுள் ளது. தொடர்ந்து நின்றபடியும் நடந்த படியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு எலும்பு சிகிச்சை நிபுணரிடம் வைத்தியம் பார்க்க வேண்டி வந்தது.

இதே தொகுதியில், முன்னாள் பத்திரிகையாளருமான அசுதோஷை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் அதன் எம்.பி.யும் மத்திய அமைச் சருமான கபில்சிபல். இவருக்கு ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் காங்கிரஸ் டெல்லியிலேயே கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தி விட்டது.

கபில்சிபலுக்கு சரிநிகர் போட்டி அளித்த பாஜக வேட்பாளரான ஹர்ஷவர்தன், ஒரு மருத்துவராக இருப்பதாலோ, என்னவோ தேர்தலுக்கு மறுதினமும் அவர் வழக்கம்போல் கட்சி அலுவலகம் கிளம்பி வந்து விட்டார். அவர் அம் மாநில பாஜக தலைவராகவும் இருப்பதும் ஒரு முக்கியக் காரணம்.

டெல்லியின் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான மீனாட்சி லேகி தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசியதில் அவரது தொண்டை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதனால் தெளிவாகப் பேச முடியாமல் இருக்கும் லேகி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற் றுள்ளார்.

எனினும், தம்மை தேடி வரும் கட்சி தொண்டர்களுக்கு நன்றி கூறியபடி வீட்டில் இருந்தும் ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவரை எதிர்த்து காங்கிரஸில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சரான அஜய் மக்கான் தேசிய செய்தித் தொடர்பாளராக வும் இருக்கிறார். எனவே, டெல்லி யில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தன் பத்திரிகை பணியில் மூழ்கி விட்டார்.

கிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸில் போட்டியிட்ட எம்.பி.யான சந்தீப் தீட்சித் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் கேரளா கிளம்பி விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x