

தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை கேரள அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே, புல்லுவிளை கடற்கரைப் பகுதி யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தெரு நாய் கூட்டத்தில் சிக்கி கடிபட்ட சிலுவம்மா (65) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்களை ஒழித்துக்கட்ட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அதிகாரி களுக்கு, முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கேரள உள் ளாட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.டி.ஜலீல் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘நாய் கடியால் பலியான சிலுவம்மாவின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், அதே பகுதியில் நாய் கடியால் பலத்த காயமடைந்த மற்றொரு பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது’ என்றார்.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக் கும் நாய் பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.