

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு கோவா சிறையில் உள்ள தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் ஜாமீன் மனு இன்று மும்பை உயர் நீதிமன்றம் கோவா கிளையில் விசாரணைக்கு வருகிறது.
தன்னுடன் பணிபுரிந்தவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது கோவா காவல் துறை பிப்ரவரி 17.ல் குற்றச்சாட்டு பதிவு செய்தது.
கடைசியாக கடந்த மாதம் 18-ஆம் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, குற்றப்பத்திரிகை நகலை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், மனு மீதானவிசாரணையை இன்று (மார்ச்- 4-ஆம் தேதிக்கு) ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. மேலும் இன்றைய விசாரணையின் போது,தேஜ்பால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தேஜ்பால் தற்போது கோவா மாநிலம் சடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.