ஓராண்டுக்குள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஓராண்டுக்குள் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

அடுத்த ஓராண்டுக்குள் செல்போன் எண்ணுடன் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தொண்டு நிறுவனமான லோக் நிதி பவுண்டேசன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “இப்போது வங்கி நடை முறைகளுக்கும் செல்போன் எண் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, செல்போன் வாடிக்கை யாளர்கள் சிம்கார்டு பெறுவதற்காக வழங்கும் தகவலை முறையாக சரிபார்ப்பதற்கான நடைமுறையை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப் பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட செல்போன் (பிரீபெய்டு உட்பட) வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள் சிம்கார்டு வாங்கும்போது வழங்கிய தகவல் களை முறையாக சரிபார்ப்பதற் கான நடைமுறையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். குறிப்பாக, அடுத்த ஓராண்டுக்குள் செல்போன் எண்ணுடன் சம்பந்தப் பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களால் பகிரப்படும் தகவல்கள், அழைப்பு கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பேஸ்புக் மூலமும் பகிர முடிவு செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களின் ரகசிய உரிமையை மீறும் இந்த செய லுக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இதுகுறித்து பரிசீலிக்கப் படும் என ஜனவரி 17-ம் தேதி நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு வரும் மே 12-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பதில் அளிக்குமாறு பேஸ்புக், வாட்ஸ்அப், மத்திய அரசு, டிராய் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in