Last Updated : 03 Feb, 2016 08:14 AM

 

Published : 03 Feb 2016 08:14 AM
Last Updated : 03 Feb 2016 08:14 AM

அமெரிக்க தரத்தில் மேற்கொண்டாலும் கெயில் எரிவாயு திட்டம் வேண்டவே வேண்டாம்: கேரளா, கர்நாடகா விவசாயிகள் வேண்டுகோள்

கெயில் எரிவாயு குழாய்களை அமெரிக்க தரத்தில் பதித்தாலும், இத்திட்டம் வேண்டாம் என கேரள, கர்நாடக விவசாயிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனமான‌ கெயில் கொச்சியில் இருந்து பெங்க ளூருவுக்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 3 மாநிலங் களின் வழியாக 871 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல முடிவெடுத்தது. இந்த திட்டத் திற்காக கேரளாவில் 501 கி.மீ, தமிழகத்தில் 310 கி.மீ, கர்நாடகா வில் 60 கி.மீ தொலைவுக்கு ரூ. 3,400 கோடி மதிப்பில் குழாய் பதிக்கும் பணிகளில் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதன்படி நிலத்தடியில் ஒரு மீட்டர் ஆழத்திலும், 66 அடி அகலத்திலும் எரிவாயுக் குழாய் பதிக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், திரிசூர், எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் வாழும் விவசாயிகள் இந்த திட்டத்திற்காக தங்களின் நிலத்தை பறிகொடுத்துள்ளனர். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள 136 கிராம விவசாயிகள் தங்களது நிலத்தை பறிகொடுத்துள்ளனர். கர்நாடகாவில் தக்ஷினா கன்னடா, சாம்ராஜ்நகர், மண்டியா, பெங்க ளூரு ஆகிய மாவட்ட விவசாயிகளி டம் இருந்து எரிவாயு குழாய் அமைக்க நிலம் பறிக்கப் பட்டுள்ளது.

வெடித்த போராட்டங்கள்

இத்திட்டத்துக்கு எதிராக கேரளாவில் தொடங்கிய போராட்டம் தமிழகம், கர்நாடகாவி லும் பரவியது. கேரளாவில் இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் குழுவாக திரண்டு மாபெரும் போராட்டங்களை முன் னெடுத்தனர். காசர்கோடு, கண் ணூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உண் ணாவிரதம், முழு அடைப்பு போராட் டம், முற்றுகை போராட்டங்கள் வலுத்தன. தமிழகத்திலும் போராட் டம் வெடித்தது.

உயிரை குடித்த குழாய்கள்

கடந்த காலங்களில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்ததில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட கசிவின் காரணாமாக 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே கேரளாவிலும், தமிழகத் திலும், கர்நாடகாவிலும் இத் தகைய விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நிகழும் அபாயம் இருக்கிறது.

இந்த திட்டத்தை அமெரிக்க தரத்தில் வழங்கினாலும், நஷ்ட ஈட்டை பன்மடங்கு உயர்த்தி வழங் கினாலும் மத்திய மாநில அரசுகள் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். எரிவாயு குழாயின் காரணமாக நிகழும் ஆபத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும். இல்லாவிடில் இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும் திரண்டு நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்பார்கள். மேலும் கெயில் திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என கர்நாடக, கேரள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x