Last Updated : 21 Jul, 2016 04:29 PM

 

Published : 21 Jul 2016 04:29 PM
Last Updated : 21 Jul 2016 04:29 PM

உ.பி.யில் தயாசங்கர் கைது கோரி வலுக்கும் போராட்டம்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த உ.பி. பாஜக துணைத்தலைவர் தயா சங்கர் சிங்கை கைது செய்யக் கோரி உத்தரப் பிரதேசத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

தயாசங்கர், உ.பி. பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட துணைத்தலைவர் ஆவார். இவர் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்கள் அதிர்ச்சியடையும் விதமாக மாயாவதியின் தேர்தல் அரசியலை ‘பாலியல் தொழில்’ உடன் ஒப்பிட்டு பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானதோடு அவரது பதவியையும் பறித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) ஹச்ரத்கஞ்ச் அம்பேத்கர் சிலை அருகே திரண்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் தயா சங்கர் சிங்கை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தயாசங்கர் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தின்போது பகுஜன் தொண்டர் ஒருவருக்கு லேசாக தீக்காயம் ஏற்பட்டது.

வெங்கய்யா கருத்து:

இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "தயா சங்கர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துவிட்டதால் அப்பிரச்சினை முடிந்துவிட்டது. அவர் கூறிய கருத்துகள் கண்டனத்துக்குரியதே.

நடவடிக்கை எடுத்த பின்னரும் போராடுபவர்கள் போராடிக் கொண்டே இருக்கட்டும். அதற்குப் பின்னணியில் இருப்பது பாஜக முன்னேறிக் கொண்டே இருக்கிறதே என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x