ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது: மும்மொழி கொள்கைக்கு கடந்த 1968-ல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆனால் அதனை பெரும்பாலான மாநிலங்கள் இதுவரை பின்பற்றவில்லை.

வடமாநிலங்களில் பணி யாற்றும் பொதுத்துறை ஊழியர்கள், நீதிபதிகள் இந்தியை படிக்க, எழுத, பேச முடியாமல் தவிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவும் நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் நாடு முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in