

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அங்குள்ள ராணுவ வெடிமருந்து ஆயுதக் கிடங்கு களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், உதாம்பூரை தலைமை யகமாகக் கொண்ட வடக்கு கமாண்ட் பிரிவின் செய்தித்தொடர்பாளர் எஸ்.டி.கோஸ்வாமி ஜம்முவில் நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி:
காஷ்மீரில் உள்ள வெடிமருந்து கிடங்குகளில் பாதுகாப்பு குறை பாடு உள்ளதாகவும், பாதுகாப்புப் படையினரிடம் போதிய ஆயுதங்கள் இல்லை என்றும் தவறான செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள வெடிமருந்து கிடங்குகள் அனைத்திலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன், இம்மாதம் 2-ம் தேதி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.