உத்தராகண்டில் நாளை தேர்தல்: உ.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு

உத்தராகண்டில் நாளை தேர்தல்: உ.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு
Updated on
1 min read

உத்தராகண்டில் 69 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல உத்தரப் பிரதேசத்தில் 2-ம் கட்டமாக 67 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உத்தராகண்டில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கர்ணாபிரயாக் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் சாலை விபத்தில் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதர 69 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவு கிறது. மொத்தம் 637 வேட்பாளர் கள் களத்தில் உள்ளனர். இதில் 56 பேர் பெண்கள் ஆவர்.

உத்தரப் பிரதேசத்தில் முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு இரண்டாம் கட்டமாக 67 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் மொத்தம் 720 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக புர்ஹான்பூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

உத்தராகண்ட் மற்றும் உத்தரப் பிரசேதத்தின் 67 தொகுதிகளிலும் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in